இன்று புதிதாய் பிறந்தோம்


 சென்றதினி மீளாது,மூடரே!நீர்

எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.

 என்று மகாகவி பாரதியார் அன்றே முழக்கமிட்டார். ஒவ்வொரு மனிதனும் நித்தமும் தின்று,ஆடிப்பாடி மகிழ்வதோடு மட்டுமல்லாமல், ஒவ்வொரு அதிகாலைப் பொழுதிலும் தாயின் கருப்பையில் இருந்து வெளியேறிய இளம் தளி போல, புத்துணர்வோடு இருத்தல் வேண்டும் என்கிறார்.
          ஒவ்வொரு மனிதனும் நித்தமும் தங்களது கவலையும், சோதனைகளையும் அதனோடு, வெற்றிகளையும் கனவு கண்ணில் கண்டவாறு விழிக்கின்றான். அவன் ஒரு நாளும் புது மனிதனாக பிறப்பதில்லை. எவன் ஒருவன் மண்ணுடன்  போராடி வெளியேறும் தளிர் போல தினமும் பிறந்து போராடி வெளியேறுகிறானோ அவனே அந்த நாளின் வெற்றியாளன். 

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு