Posts

எதிர்பார்ப்பு

Image
இந்த உலகில் எதிர்பார்ப்பு இல்லாமல்  யாராலும் இருக்க முடியாது.  குழந்தைகள் பெற்றோர்களை எதிர்பார்ப்பதும்,  பெற்றோர்கள் குழந்தை எதிர்பார்ப்பதும்,  கணவன் மனைவி எதிர்பார்ப்பதும், மனைவி கணவனை எதிர்பார்ப்பதும்  இவ்வாறு கூறிக் கொண்டே போகலாம்.  இப்படி ஏமாற்றத்தை தரும் எதிர்பார்ப்பை எதிர்பார்க்காமல் யாராலும் இருக்க முடியாது.  ஆனாலும் ஒரு சிறு வழி உண்டு.  மற்றவர்களை எதிர்பார்ப்பதை குறைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். ஒரு சிறு மாற்றம் வரும் முயற்சி செய்து பாருங்கள். நன்றி.

இன்று புதிதாய் பிறந்தோம்

Image
  சென்றதினி மீளாது,மூடரே!நீர் எப்போதும் சென்றதையே சிந்தை செய்து கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம் இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர் எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்; தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.  என்று மகாகவி பாரதியார் அன்றே முழக்கமிட்டார். ஒவ்வொரு மனிதனும் நித்தமும் தின்று,ஆடிப்பாடி மகிழ்வதோடு மட்டுமல்லாமல், ஒவ்வொரு அதிகாலைப் பொழுதிலும் தாயின் கருப்பையில் இருந்து வெளியேறிய இளம் தளி போல, புத்துணர்வோடு இருத்தல் வேண்டும் என்கிறார்.           ஒவ்வொரு மனிதனும் நித்தமும் தங்களது கவலையும், சோதனைகளையும் அதனோடு, வெற்றிகளையும் கனவு கண்ணில் கண்டவாறு விழிக்கின்றான். அவன் ஒரு நாளும் புது மனிதனாக பிறப்பதில்லை. எவன் ஒருவன் மண்ணுடன்  போராடி வெளியேறும் தளிர் போல தினமும் பிறந்து போராடி வெளியேறுகிறானோ அவனே அந்த நாளின் வெற்றியாளன்.